ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மக்களின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை கொள்ளையடித்தவர்களிடமிருந்து அதனை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை இந்த வரவு செலவுத் திட்டத்தில் காண முடியவில்லை என்றும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்ல எனவும் நிராகரிக்கப்படவேண்டிய, குப்பைக்கூடைக்குள் வீசப்பட வேண்டிய வரவு செலவுத்திட்டம் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விடுதலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.