follow the truth

follow the truth

December, 17, 2024
Homeஉள்நாடுசிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய படகு – 303 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

சிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய படகு – 303 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

Published on

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு படகில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

படகு ஆபத்தில் சிக்கியபோது அதில் இருந்த தொழிலாளர்கள் தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மியான்மரின் மீன்பிடிக் கப்பல் கடந்த திங்கட்கிழமை வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் கடற்பரப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கரை ஒதுங்கியது.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக படகில் இருந்த ஒருவர் இலங்கை கடற்படைக்கு அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, வியட்நாம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களை தொடர்புகொண்டு குறித்த படகு தொடர்பான தகவல்களை இலங்கை பரிமாறிக்கொண்டது.

இதனையடுத்து, குறித்த படகுக்கு அருகில் பயணித்த ஜப்பானிய கப்பல் மூலம் இலங்கையர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய விஜயத்தின் போது ஜனாதிபதி ஆற்றிய உரை

எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் மேதகு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கும், மாண்புமிகு பிரதமர்...

பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது

பாராளுமன்றம் நாளை (17) மு.ப 9.30 மணிக்குக் கூடியதன் பின்னர் அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய முதலில்...

ஜனாதிபதி – இந்திய உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் நடைபெற்றது. கடந்த...