உலக கிண்ணம் இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டியானது இலங்கை நேரப்படி, பிற்பகல் 1.30 க்கு அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, பாகிஸ்தான் அணியை மெல்பர்னில் எதிர்வரும் 13 ஆம் திகதி உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதி போட்டியில் சந்திக்கவுள்ளது.