இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் இழைக்கும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.
இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை குழாம் இன்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது.
இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மஹேல ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.