ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தைச் செலுத்தாத சுமார் 73 ஆயிரம் நுகர்வோருக்கு நீர் விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணங்களைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி ஊடாக தகவல் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதன் பின் சுமார் 100 வாடிக்கையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகை 145 கோடி ரூபாவாகும். எனினும் நுகர்வோர் தமது பட்டியல் கொடுப்பனவைச் செலுத்தாததால் சபை 800 கோடி ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.