follow the truth

follow the truth

January, 29, 2025
Homeஉள்நாடுகேக் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட 5 பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் –...

கேக் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட 5 பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் – வர்த்தமானி வெளியீடு!

Published on

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஐந்து பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று முதல் அமுலுக்கு வருவதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் சுவிங் கம் உள்ளிட்ட இனிப்புகள், சொக்லேட், பிஸ்கட், கேக் மற்றும் வாசனை சவர்க்காரங்கள் ஆகியவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது இறக்குமதியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலை, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரி ஆகியவற்றை ஆங்கிலத்தில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயில் இ-டிக்கெட் தொடர்பான மோசடி குறித்து CID விசாரணை

ரயில்வே திணைக்களத்தால் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்...

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 170 வர்த்தகர்களுக்கு அபராதம்

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ​​கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை...

2023 ஆண்டை விட 2024 ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைந்துள்ளது

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்...