போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக கொலின் அக்கெர்மேன் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய நெதர்லாந்து அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில், 92 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக மொஹம்மட் ரிஷ்வான் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் நெதர்லாந்து அணியின் ப்ரெண்டென் குளோவர் 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.