Homeஉலகம்ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும், 2025 ஜூலை 28 முதல் 30 வரை மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன், இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதனை முன்னிட்டு, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இவ்வருடத்துடன், 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் இத்தருணத்தில், ஜனாதிபதி திசாநாயக்கவின் மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாக அமையும்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வணிக மன்றமொன்றில் உரையாற்றவும், வெளிநாட்டில் வாழும் இலங்கைச் சமூகத்தினரைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திசாநாயக்கவின் இப்பயணத்தில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் இணைந்து கொள்ளவுள்ளார்கள்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular