இலங்கையின் மிகப்பெரிய முழுமையான ஒருங்கிணைந்த அலுமினிய உற்பத்தியாளரும், Haleys குழுமத்தின் அங்கத்தினருமான Alumex, நாடு முழுவதும் மொத்த மற்றும் சில்லறை அலுமினிய பொருட்கள் மற்றும் உபகரண விநியோக சேவைகளுக்காக www.alumexstore.com என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
www.alumexstore.com இணையதளம் நாட்டிலுள்ள ஒரு அலுமினிய உற்பத்தியாளரால் மொத்த மற்றும் சில்லறை அலுமினிய பொருட்கள் மற்றும் உபகரண விநியோக சேவைகளுக்காக நிறுவப்பட்ட முதலாவது இணையதளமாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உயர்தர அலுமினியப் பொருட்களை ஒன்லைனில் வாங்கவும், அவர்களின் வீட்டு வாசலுக்கே வந்து விநியோகம் செய்யவும், உள்ளூர் Alumex களஞ்சியங்களில் இருந்து நேரடியாக வாங்கவும் உதவுகிறது.
இந்த புதிய விநியோக சேவையை அனுபவிக்கும் போது, Cash on Delivery மற்றும் கிரெடிட்/டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.