இலங்கையின் மிகப் பெரிய நிதித் தீர்வுகள் வழங்குநரான HNB PLC, பல்வேறு சலுகைகள் உட்பட பிரத்தியேக தவணைப் பெக்கேஜ்களை வழங்க Micro Cars Limited உடன் கைகோர்த்துள்ளதோடு SAIC Almaz 7-சீட்டர் SUV மற்றும் Proton Saga Sedan காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் வழங்குகின்றது.
இந்த கூட்டாண்மையானது தங்களது கனவு வாகனத்தை வாங்க விரும்புவோருக்கு மதிப்பு மிக்க வாடிக்கையாளர் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் இரு நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தவணை Packகளை வழங்குகிறது.
HNB AGM- PFS காஞ்சனா கருணாகம, HNB லீசிங் பிரிவின் தலைவர் சுசித் பெரேரா, Micro Cars தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி லோரன்ஸ் பெரேரா, Micro Cars குழுமத்தின் பணிப்பாளர் அசேல லிஹினிகடுவ, Micro Cars விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் ரவிந்து டி சில்வா மற்றும் வாடிக்கையாளர் உறவுகள் மேம்பாடுகள் தலைவர் ஜேக்கப் நிஷாந்தன் களனியில் உள்ள Micro Cars தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இரு நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
“நாங்கள் Micro Cars மற்றும் எங்கள் பரஸ்பர வாடிக்கையாளர் தளத்துடனான எங்கள் உறவை பல ஆண்டுகளாக பலப்படுத்தியுள்ளோம், அவர்களின் கனவு வாகனத்திற்கு முதலீடு செய்வதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகிறோம். எனவே, அவர்களுடன் மீண்டும் இந்த பயணத்தை மேற்கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்த தனித்துவமான வாய்ப்பை எங்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்,” என HNB AGM- PFS காஞ்சன கருணாகம தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், HNB General Insurance இன் கவர்ச்சிகரமான தள்ளுபடி செய்யப்பட்ட வாகனக் காப்புறுதி பிரீமியங்களுடன், வாடிக்கையாளர்கள் ரூ. 4.5 மில்லியன் பெறுமதியான இலவச ஆயுள் காப்புறுதித் தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும். Automobile தயாரிப்புகள், Servicing, உதிரிப் பாகங்கள், டயர்கள், பேட்டரிகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றில் சிறப்பு தள்ளுபடியை அணுகக்கூடிய மதிப்புமிக்க Prime கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு HNB முதல் வருடாந்திர கட்டணத்தை தள்ளுபடி செய்யும்.
“சமீபத்திய SAIC Almaz 7 சீட்டர் SUV மற்றும் Full Option Proton SAGA Sedan காரின் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மலிவு, கவர்ச்சிகரமான கட்டணங்கள் மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குவதில் HNB உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முன்னோக்கி நகர்ந்து, எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கனவு வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான சிறந்த கட்டண தெரிவுகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதற்கு HNB உடனான எமது சேவைகளை விரிவுபடுத்துவதற்கு நாங்கள் நம்புகிறோம்” என Micro Cars குழுமத்தின் பணிப்பாளர் அசேல லிஹினிகடுவ தெரிவித்தார்.
இதற்கிடையில், Micro Cars SAIC Almazக்கு 3 ஆண்டுகள் அல்லது 100,000 கிலோ மீற்றர் உத்தரவாதத்தை வழங்கும், மேலும் 5 ஆண்டுகள் அல்லது 150,000 கிலோ மீற்றர் உத்தரவாதம், Proton SAGA க்கு எது முதலில் வருகிறதோ அதுவாகும்.
மேலும், HNB Leasing மூலம் குத்தகைக்கு எடுக்கும் அனைவருக்கும் Labour-Free மூன்று சேவைகளும் வழங்கப்படும்.