டி20 உலகக்கிண்ண தொடரின் எட்டாவது சீசன் அக்டோபர் 16ஆம் திகதி முதல் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இன்று இடம்பெற்ற உலகக்கிண்ண டி20 பயிற்சிப்போட்டியில் இலங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிம்பாப்வே அணியை வெற்றி கொண்டுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதனையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பாக குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர், 189 என்ற வெற்றியிலக்கை நோக்கி விளையாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்ஷன மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.