சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்ட ஊழியர்மட்ட ஒப்பந்தம் ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஊழியர்மட்டத்தில் செய்துகொண்ட ஒப்பந்தம் ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பதை நாடு தெரிந்து கொள்ளவேண்டாமா என கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன,
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) வரைவு ஒப்பந்தம் மட்டுமே எட்டப்பட்டுள்ளதாகவும் இன்னும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கையுடன் உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்கள் சிலரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்ததாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஆனால் இறுதி ஊழியர் ஒப்பந்தம் இதுவரையில் எட்டப்படவில்லை என பிரதமர் கூறினால், அதை தாங்கள் ஏற்றுக்கொள்ளவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.