இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதற்கு அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக SDB, DFCC மற்றும் NDB ஆகிய வங்கிகளுக்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனம் வழங்கும் 265 மில்லியன் டொலர் நிதியின் ஒரு பகுதியாகும் என்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிதியானது இலங்கையிலுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு கொவிட் தொற்றுக்கு பின்னரான பொருளாதார மீட்சியை நோக்கிய அவர்களது பயணத்தில் உதவுவது மாத்திரமின்றி, அது இலங்கை பெண்கள், அவர்களது வர்த்தகங்கள் வளர்வதற்கும் உதவும்’ என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.