நாட்டில் பார்வையற்றோர் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவரும் பார்வையற்றோருக்கான தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான பிரசன்ன விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார் .
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பார்வையற்றோர் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரத்தின் விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 லட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது .
பார்வையற்ற குழந்தைகள் கல்விக்காகப் பயன்படுத்தும் பலகையின் விலை சுமார் 300 ரூபாவாக இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது.
அத்தோடு அவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவுகின்றது . விசேட தொழில்நுட்ப முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒலிப் புத்தகங்களைக் கேட்கும் தொழில்நுட்ப சாதனத்தின் விலை 22 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது என்றார் .