follow the truth

follow the truth

January, 18, 2025
Homeவிளையாட்டுதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டீ -20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டீ -20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

Published on

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டீ -20 தொடரில் 1-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

திருவானந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மஹாராஜ் 41 ஓட்டங்களையும் மார்கிரம் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ரபாடா மற்றும் என்ரிச் நோக்கியா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இந்திய அணி சார்பில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஸ்தீப் சிங் தெரிவுசெய்யப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று(18) ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆறு போட்டிகள்...

சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல்...

அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் : பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதைத் தொடர்ந்து,...