மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை தாம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில், தொலைகாணொளி வழியாக கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைத்த வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் உறுப்பு நாடுகளின் விவாதம் இன்று இடம்பெறுகிறது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரை நிகழ்த்தியுள்ளார்.
கொவிட் – 19 வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஐ.நாவில் எடுத்துரைத்துள்ளார்.