ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல் அரியணை வாரிசானது வரை அவரது ஆட்சியை நாம் திரும்பிப் பார்ப்போம்.
21 ஏப்ரல் 1926 அன்று லண்டன் பெர்க்லி சதுக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பிறந்தார் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர். தமது தந்தை, அப்போதைய யார்க் கோமகன் ஆல்பர்ட், மற்றும் தாய் முன்னாள் லேடி எலிசபெத் போவ்ஸ்-லியான் ஆகியோர் அரவணைப்பில் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர்.
எலிசபெத்தின் இளமைக் காலத்தில், அரியணை அவருக்கு விதிக்கப்பட்டதாக இல்லை.
ஆனால், எலிசபெத் மிகச் சிறு வயதிலிருந்தே பொறுப்புணர்வுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
எலிசபெத், 1930இல் பிறந்த அவரது சகோதரி மார்கரெட் ரோஸ் இருவரும் வீட்டிலேயே கல்வி கற்றனர்.
1936இல் அரசர் எட்டாம் எட்வர்ட் முடியைத் துறந்ததைத் தொடர்ந்து, எலிசபெத்தின் தந்தை அரசர் ஆறாம் ஜார்ஜ் ஆனார். எலிசபெத் அரியணைக்கான வாரிசானார்.
இரண்டாம் உலக போரின் போது, எலிசபெத் மற்றும் அவரது சகோதரி மார்கரெட் விண்ட்சருக்கு அனுப்பப்பட்டனர். இந்தப் படம் பிபிசியில் சில்ட்ரன்ஸ் ஹவர் நிகழ்ச்சியை அவர்கள் நாட்டிற்கு ஒலிபரப்புவதைக் காட்டுகிறது.
இளம் இளவரசி, இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் துணை பிராந்திய சேவையில் (ATS) சேர்ந்தார், லாரி ஓட்டவும், அதை சீர் செய்யவும் கற்றுக்கொண்டார்.
1947இல் அவர் தமது தூரத்து உறவினரான ஃபிலிப் மவுன்ட்பேட்டனை மணந்தார். ஃபிலிப் மவுன்ட்பேட்டன் எடின்பரோ கோமகன் ஆனார்.
இவர்களுடைய முதல் குழந்தை சார்ல்ஸ் 1948ஆம் ஆண்டு பிறந்தார். அவரைத் தொடர்ந்து சார்ல்ஸின் சகோதரி ஆன் 1950ஆம் ஆண்டு பிறந்தார்.
ஜனவரி 1952இல், எலிசபெத் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தமது தந்தைக்குப் பதிலாக ஒரு வெளிநாட்டுப் பயணத்தை ஃபிலிப்புடன் சேர்ந்து மேற்கொண்டார். சில நாட்களில் அரசர் தூக்கத்தில் உயிரிழந்தார்
எலிசபெத் உடனடியாக நாடு திரும்பினார். புதிய ராணிக்கு அப்போது வயது 25.
பின்னர், ஜூன் 1953இல், வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் எலிசபெத் ராணி ஆக முடிசூட்டப்பட்டார்
பிரிட்டன் போருக்குப் பிந்தைய சிக்கனத்தை இன்னும் தாங்கிக் கொண்டிருந்தாலும், சில வர்ணனையாளர்கள் முடிசூட்டு விழாவை ஒரு புதிய எலிசபெத் யுகத்தின் விடியல் என்று வர்ணித்தனர்.
1957ஆம் ஆண்டில், பல கிறிஸ்துமஸ் தின ஒளிபரப்புகளில் முதன்மையான உரையை ஆற்றினார் ராணி
அலுவல்பூர்வ பணிகளுக்கு இடையில் எலிசபெத் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டார்.
1966ஆம் ஆண்டில், வெம்ப்லியில், தனது அணியை மேற்கு ஜெர்மனிக்கு எதிராக 4-2 என்ற கணக்கில் உலகக் கோப்பை இறுதி வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, இங்கிலாந்து கேப்டன் பாபி மூருக்கு ஜூல்ஸ் ரிமெட் டிராபியை ராணி வழங்கினார்.
29 அக்டோபர் 1966 அன்று, நிலக்கரி முனை நிலச்சரிவுக்கு பாண்ட்கிளாஸ் ஜூனியர் பள்ளியில் 144 பேர் பலியான எட்டு நாட்களுக்குப் பிறகு, வெல்ஷ் கிராமமான அபெர்ஃபானுக்கு ராணி விஜயம் செய்தார். பலியானவர்களில் 116 குழந்தைகள். ராணி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அது அவரது ஆட்சியின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாக இது அமைந்தது.
கேனர்ஃபோன் கோட்டையில் நடந்த ஒரு விழாவில் தனது மகன் இளவரசர் சார்ல்ஸுக்கு வேல்ஸ் இளவரசருக்கான மகுடத்தை சூட்டினார் ராணி. அவர் ஒன்பது வயதில் அப்பட்டத்தைப் பெற்றார், ஆனால் இந்தப் பட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகே இளவரசருக்கான மகுடம் சூட்டும் விழா நடைபெறவேண்டும் என்று ராணி வலியுறுத்தியிருந்தார்.
ராணி அரியணைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி 1977ல் நாடு வெள்ளி விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டது. ராணி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உற்சாகமான கூட்டத்தைச் சந்தித்தார்.
ஆண்டுதோறும், ராணியின் பொதுப் பணிகள் தொடர்ந்தன. ராயல் நியூசிலாந்து பாலினேசியன் திருவிழாவின் தொடக்கத்தில் மாட்சிமை பொருந்திய ராணி மற்றும் எடின்பரோ கோமகன், நியூசிலாந்து மவோரி மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.
1981இல், எலிசபெத்தின் மூத்த மகன் சார்ல்ஸ், டயானா ஸ்பென்சரை மணந்தார். சார்லஸ் – டயானா தம்பதியர் தங்கள் விவாகரத்துக்கு முன் வில்லியம் மற்றும் ஹாரி என்ற இரு மகன்களைப் பெற்றனர். 1997 இல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்.
ராணி தனது கிறிஸ்துமஸ் உரையின் போது 1992 ஆம் ஆண்டை தனது “ஆன்னஸ் ஹாரிபிலிஸ்” என்று விவரித்தார். அந்த ஓராண்டில் தனது மூன்று குழந்தைகளின் திருமணங்கள் முறிந்ததையும் வின்ட்சர் கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டதையும் கண்ட வருத்தத்தை அவர் வெளிப்படுத்தினார்.
1997இல் வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு, ராணி பொதுவில் தோன்றாததற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார். இறுதியில் அவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அஞ்சலியைப் பார்த்தார். அதோடு தேசத்திற்கு நேரடி ஒளிபரப்பு செய்தார்
அரச குடும்பம் பொதுமக்களைச் சந்திப்பதற்கு மிகவும் நெருக்கமான, முறைசாரா அணுகுமுறையை முயன்று பார்த்த நேரத்தில், கிளாஸ்கோவில் உள்ள கேஸில்மில்க் பகுதியில் உள்ள தனது வீட்டில் ராணி திருமதி சூசன் மெக்கரோனுடன் தேநீர் அருந்தினார்.
2000ஆம் ஆண்டில், ராணியின் தாய் தனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாடினார் – இங்கே அவரது மகள்கள் இளவரசி மார்கரெட் மற்றும் ராணி எலிசபெத் ஆகியோருடன்
2002ஆம் ஆண்டில், ராணி தனது சகோதரி இளவரசி மார்கரெட் மற்றும் அவரது தாயார் ஆகியோரின் மரணத்தை எதிர்கொண்டார்.
2005ஆம் ஆண்டில், ராணி எலிசபெத்தின் மூத்த மகன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இளவரசர் சார்ல்ஸ் மற்றும் கமிலா பார்க்கர் பவுல்ஸ் வின்ட்சர் கில்டாலில் ஒரு சிவில் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ஆசீர்வாதம் பெற்றனர்
2007ஆம் ஆண்டில், ரோஹாம்டனில் லான் டென்னிஸ் சங்கத்தின் புதிய தலைமையகத்தைத் திறக்கும் போது, ராணி மழையில் இருந்து தஞ்சம் அடைவது படம் பிடிக்கப்பட்டது.
ராணி தனது அதிகாரபூர்வ 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓர் உரையில் முதுமை பற்றிய க்ரூச்சோ மார்க்ஸின் கட்டளையை மேற்கோள் காட்டினார்: “எல்லோருக்கும் வயதாகலாம்; நீங்கள் செய்ய வேண்டியது நீண்ட காலம் வாழ வேண்டியது தான்”
2011ஆம் ஆண்டு அவரது பேரன் இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் மிடில்டனுக்கு திருமணம் நடந்தது. அவரது பிற்கால மகிழ்ச்சியான நிகழ்வுகளில் இது ஒன்று.
லெய்செஸ்டர் விஜயம். 2012இல் இங்கிலாந்தின் 60வது ஆண்டு வைர விழா சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது.
இதைத் தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் நடிகர் டேனியல் கிரெய்க் நடித்த மற்றொரு பிரிட்டிஷ் நட்சத்திரமான ஜேம்ஸ் பாண்டுடன் படமாக்கப்பட்ட காட்சியில் தோன்றினார்.
ஜூன் 2016இல் ராணி தனது அதிகாரபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்தார். அந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் 90 வயதை எட்டினார்
எடின்பரோ கோமகன் ஓய்வுக்குப் பிறகு, ராணி தனது பொதுப் பணிகளைத் தொடர்ந்தார். ராணி தனது குதிரை ‘ஸ்பார்க்லர்’ 2018இல் ராயல் வின்ட்சர் குதிரை பந்தயத்தில் போட்டியிட்டதைப் பார்வையிட்டார்.
ராணியின் குடும்பம் வளர்ந்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டது – இங்கே அவர் சஸ்ஸெக்ஸின் கோமகன் மற்றும் சீமாட்டி மேகனுக்குப் பிறந்த மகன் ஆர்ச்சி, மேகனின் தாய் டோரியா ராக்லாண்ட் ஆகியோருடன் படம்பிடிக்கப்பட்டுள்ளார். ஆனால் குடும்பத்தில் தொடர்ந்து அழுத்தங்கள் இருந்தன – இளவரசர் ஆண்ட்ரூவின் அமெரிக்க நிதியாளர் மற்றும் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு மற்றும் அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரியின் வளர்ந்து வரும் ஏமாற்றம் ஆகியவை அடங்கும்.
ராணியும் இளவரசர் பிலிப்பும் ஜூன் 2020 இல் பிலிப்பின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு எடுத்த புகைப்படம்
ராணிக்கு நான்கு குழந்தைகள், 8 பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்
ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் 9 ஏப்ரல் 2021 அன்று 99 வயதில் இறந்தார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பக்கத்தில் இருந்தார். கோவிட் தொற்றுநோய் பேரிடரின்போது இறுதிச் சடங்கில் ராணியின் உருவம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எதிரொலித்தது, அதே பாணியில் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்க வேண்டியிருந்தது.
ராணி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடனை ஜூன் 2021 இல் வின்ட்சர் கோட்டையின் கிராண்ட் காரிடாரில் சந்தித்தார்
மே 2022 இல் மேற்கு லண்டனில் உள்ள பாடிங்டன் ஸ்டேஷனில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட எலிசபெத் பாதையின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ராணி ரயில் டிக்கெட்டை வாங்குகிறார் .
ராணி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் லிஸ் ட்ரஸை வரவேற்கிறார் , செப்டம்பர் 2022 இல் புதிய பிரதமராக வருமாறு முறைப்படி அழைக்கிறார்.