உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை நடத்துவதற்காக மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாமொன்று சமீபத்தில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.