எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக லங்கா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பொருளாதார நிலைமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதற்கு மற்றுமொரு காரணம் என லங்கா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வாவும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் தாமதம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
ஒரு தொகையை வைப்பிலிட்ட பின்னர், எரிபொருளை முன்பதிவு செய்யும் புதிய முறைதான் தாமதத்திற்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.