ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று விதிகளை மீறிய காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜீ.எல்.பீரிஸை அந்த பதவியில் இருந்து நீக்கிய பின்னர் அந்த தலைவர் பதவிக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தெரிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் , அதன் கீழ் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால், அதனை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை மறுசீரமைத்து வருவதுடன், மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.