நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டத்தரணி விஜித் குமாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதியாக பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெயரிடப்பட்டுள்ளார்.
இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று(29) மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி பிரியலால் சிறிசேனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.