follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் எரான் விக்ரமரத்ன  எம்.பி உரை

ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் எரான் விக்ரமரத்ன  எம்.பி உரை

Published on

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் 197 அங்கத்தவர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையின் வருடாந்த  மாநாடு (அல் மஜ்லிஸ்) ஆகஸ்ட்  27-ஆம் திகதி கொழும்பு தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள அதன் தலைமையகக் கேட்பார் கூடத்தில் நடைபெற்றது.

இவ்வமர்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமான  எரான் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் நாடு எதிர் நோக்கியுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களையும் அவற்றை மட்டுப்படுத்தும் வழிவகைகளையும் விளக்கினார். பொருளாதார  அரசியல் காரணங்களுக்கு அப்பால் இனங்களுக்கிடையிலான ஐக்காயத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி பிரதம அதிதிக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்தார்.

இம்மாநாட்டின் போது அடுத்த இரண்டாண்டுகளுக்கான இரண்டு உதவித்தலைவர்களும் மத்திய ஆலோசனை சபைக்கான (ஷூரா) 16 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...