சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் தர்ஜினி சிவலிங்கம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
தற்போது அவுஸ்ரேலியாவில் வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் தர்ஜினி சிவலிங்கம் அங்கிருந்து நேரடியாக சிங்கப்பூர் சென்று இலங்கை குழாத்துடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் செப்டெம்பர் 3ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.