follow the truth

follow the truth

December, 29, 2024
Homeஉள்நாடுவெளிநாடு செல்லும் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

Published on

சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் அரச ஊழியர்கள், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள வங்கி அமைப்பின்  மூலம் தமது பெயரில் உள்ள வெளிநாட்டு நாணயக் கணக்குக்கு பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் ஊழியர்களில் முதன்மை மட்ட அதிகாரிகள், 100 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கு 200 அமெரிக்க டொலர்களும் அனுப்ப வேண்டும்.

மூன்றாம் நிலை அதிகாரிகள் 300 அமெரிக்க டொலர்களும், உயர் மட்ட அதிகாரிகள் 500 அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் மனுஷவின் சகோதரருக்கு விளக்கமறியல்

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரை எதிர்வரும் 6 ஆம் திகதி...

சீகிரியாவின் அபிவிருத்திக்கு கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி

சீகிரியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு...

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ, ஒருகொடவத்த, கொழும்பு 10 மற்றும் கொழும்பு...