follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் – கணேசலிங்கம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் – கணேசலிங்கம்

Published on

ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமான விடயமாகும்.

எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என மலையக சிவில் அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

ஹாட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்படி கூட்டமைப்பின் தலைவர் கணேசலிங்கம் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. மக்கள்மீது சுமைகள் திணிக்கப்பட்டன.

எனவே, நாட்டை மீட்கவும், அரசியல் மற்றும் ஜனநாயக மறுசீரமைப்புகளை கோரியுமே மக்கள் வீதிகளில் இறங்கினர். ஜனநாயக வழியில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளையாக முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு பதவி விலக வேண்டி ஏற்பட்டது.

போராட்டத்தால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி, போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களும் அந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட வேண்டியவர்கள் சுமந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் நீதிக்காக போராடியவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். எனவே, கைதுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களை தண்டிக்கலாம். ஆனால் ஜனநாயக வழியில் போராடியவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, மலையக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். பொருளாதார சிக்கலை பயன்படுத்தி, மலையக சிறார்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுமி ரமணியின் மரணத்தை சாதாரணமாக கருதிவிட முடியாது.” – என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...