பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான ”ஹால் சமீர” என அழைக்கப்படும் வர்ணகுலசூரிய கிரிஸ்டெபூகே சமீர சம்பத் பெர்னாண்டோ, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், அரிசி உற்பத்தியாளர்களிடமிருந்து பெருமளவிலான அரிசி தொகையை சேகரித்து அந்த பெறுமதிக்கான காசோலையை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான குறித்த சந்தேகநபர், அரிசி மோசடி உள்ளிட்ட நிதி மோசடிகளுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படுகின்றார்.
சந்தேகநபருடைய வீட்டை சோதனையிட்டபோது இத்தாலி மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.