அத்தியாவசியமற்ற / அவசர தேவையற்ற தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 100 வீத உத்தரவாத பண வைப்பீட்டை அத்தியாவசியமாக்கி, உடன் அமுலாகும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த நாணய சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
செல்போன், தொலைக்காட்சி, கைக்கடிகாரம், குளிர்சாதன பெட்டி, ரப்பர் டயர்கள், பழங்கள், குளிரூட்டிகள், பானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட 623 எச்எஸ் குறியீடு பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய வங்கி 100 வீத உத்தரவாத தொகையை அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் இந்த அறிவிப்பினால் மேற்படி பொருட்களுக்கான இறக்குமதியில் தாக்கம் ஏற்படும் அதேசமயம் அந்தவகை பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.