follow the truth

follow the truth

November, 14, 2024
Homeஉள்நாடுஇலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானம்

Published on

 ஊடகத் துறையில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்களின் நிறுவனத்தை தாபிப்பதற்காக கடந்த ஆண்டு ஒக்டோபர் 5 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடாத்தல் குழுவால் குறித்த நிறுவனத்தைத் தாபிப்பதற்கு ஏற்புடைய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில் சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் முன்மொழியப்பட்டுள்ள ‘இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்  நிறுவனம்’ எனும் பெயருக்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயர் ‘இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனம்’ எனத் திருத்தம் செய்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று சேவையில் ஈடுபடவிருந்த சில ரயில்கள் இரத்து

ரயில் சாரதிகள் மற்றும் ரயில் உதவியாளர்கள் சேவைக்கு சமுகமளிக்காமை காரணமாக இன்றைய தினத்திற்குள் 33 ரயில் சேவைகள் இரத்து...

இதுவரையிலான தேர்தல் வாக்களிப்பு வீதம்

பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று காலை 10 மணிவரையில் கொழும்பு - 20% யாழ்ப்பாணம் -...

இன்று பலத்த பாதுகாப்பு – சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில்

இன்று இடம்பெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி...