கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொழும்பில் உள்ள பெண்களுக்கான டி சொய்சா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 சிசுக்களை பிரசவித்துள்ளார்.
இன்று காலை சிசேரியன் சிகிச்சை மூலமாக குறித்த மூன்று குழந்தைகளும் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தாய் மற்றும் குழந்தைகள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.