உணவுப் பொதியின் விலையினை குறைக்க தீர்மானித்திருப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தேநீரின் விலையை குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.