9 ஆவது ஆசிய பசுபிக் சுக்போல் சம்பியன்ஷிப் போட்டி நாளை (05) மலேசியாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஒகஸ்ட் 07 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இப்போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக லசிரு சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தலைமையில் இலங்கை அணி போட்டியிடவுள்ளது.
இலங்கை சார்பில் களமிறங்கும் வீரர்களின் பெயர் பட்டியலை இலங்கை சுக்போல் சம்மேளனம் வெளியிட்டுள்ளது