இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் பதக்கம் பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற 100 மீற்றர் தகுதிகாண் போட்டியில் 10.6 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து பதக்கம் பெறும் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவிலேயே இசுரு குமார வெண்கல பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ள நிலையில், யுபுன் அபேகோன் ஊடாக இலங்கைக்கு பதக்கமொன்று கிடைக்கலாம் என எதிர்பார்க்ககப்படுகிறது.