கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று(27) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட ‘பஸ் பொட்டா’ உயிரிழந்துள்ளார்.
‘பஸ் பொட்டா’ என அழைக்கப்படும் சமன் ரோஹித்த பெரேரா உள்ளிட்ட நால்வர், கம்பஹா நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காரொன்றில் வந்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.