முஸ்லிம் விவாகரத்து சட்டங்களை கையாழும் காதி நீதிமன்றங்கள் இல்லாமல் செய்யப்பட்டு பொது நீதி மன்றங்களில் குறித்த பிரச்சிணைகளை கையாளவேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
குளோப் தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
மேலும் முஸ்லிம் விவாகரத்து சட்டத்தில் மட்டும் அல்லாது கண்டி சட்டத்தையும் மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளோம் அந்த சட்டத்தில் 16 வயது தொடக்கம் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்ய முடியும் என உள்ளது அதையும் மாற்றுவதற்கான நடவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முஸ்லிம் விவாக சட்டத்தில் பெண் ஒருவர் திருமணம் செய்யும் போது அவர் கை ஒப்பம் இடுவதில்லை அவ்வாறான விடயங்கள் கட்டணம் மாற்றத்திற்கு உட்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.