கொழும்பின் சில பகுதிகளில் 07 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை(23) இரவு 11 மணிமுதல் நாளை மறுதினம் அதிகாலை 6 மணிவரை காலப்பகுதியில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பின் 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எனவே, நீர் வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.