கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக உள்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என இங்கிலாந்து கட்சித் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தனது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படுமாறு பிரித்தானியாவின் லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் நிலை குறித்த அவசர விவாதத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான சூழ்நிலைக்கு ராஜபக்ஷக்களின் அரசின் ஊழலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்