கொழும்புக்கு மேலதிகமாக ஏனைய மாவட்டங்களிலும் இன்றைய தினம் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலனையும், ஏனைய மாகாணங்களுக்கு 50 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலனையும் விநியோகிக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.