மக்களின் தன்னெழுச்சி போராட்டம் காரணமாக நாளைய தினம்(09) எந்த பேருந்தும் இயக்கப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொலிஸார் வீதிகளை மூடுகின்றமையினால் மாற்று வழிகளைப் பயன்படுத்துகின்றமை காரணமாக எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளது.
இதன்காரணமாகவே குறித்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்படும் எனவும், மக்கள் போராட்டத்திற்கு தமது தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்துகளின் நடத்துனர்கள் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருளை மாத்திரமே பெற்றுக்கொள்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.