எரிபொருள் கோரி ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இன்று (06) ரயில் சேவையை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று பல அலுவலக ரயில்களை ரத்து செய்ய நேரிட்டதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் திரு.காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
இன்று இயக்கப்பட உள்ள 48 அலுவலக ரயில்களில் 22 மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.