புகையிரத போக்குவரத்து சேவையாளர்களில் சிலர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
புகையிரத திணைக்களம் முறையற்ற வகையில் சேவையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதாக குற்றம் சுமத்தி இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து தொழிலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் புகையிரதங்கள் தரிப்பிடங்களில் இருந்து அனுப்பி வைக்கும் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களின் அதிபர்கள் கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக, அவர்கள் கடமைகளிலிருந்து விலகியுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.