மருத்துவ அனுமதி கிடைத்ததன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் (Pfizer) தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று(03) நடைபெற்ற கொவிட் ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியேற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.