கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) இருந்து சுற்றுலா அமைச்சின் அலுவலகம் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, அரசாங்க செலவினங்களை குறைக்கும் நோக்கில் இதனை அரச கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எடுத்த தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.