follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுலிபியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களை கண்காணிக்குமாறு லிபிய அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை

லிபியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களை கண்காணிக்குமாறு லிபிய அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை

Published on

இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள தேர்தல்களைக் கண்காணிக்குமாறு லிபிய அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது

இலங்கையிலுள்ள லிபிய அரசின் தூதரகத்தின் பொறுப்பாளர் அமர் ஏ.எம். முப்தா அவர்களை 2021 செப்டம்பர் 01ஆந் திகதிஇ புதன்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்இ இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளிலான பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினார்.

அமைச்சர் பீரிஸ் அண்மையில் புதிதாக வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காகஇ லிபிய வெளிநாட்டு அமைச்சரின் பாராட்டுக்களை லிபியாவின் தூதரகப் பொறுப்பாளர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

லிபியாவின் தற்போதைய நிலைமைஇ குறிப்பாக மார்ச் 2021 முதல் பதவியில் இருக்கும் இடைக்கால அரசாங்கத்தின் வகிபாகம் குறித்து லிபியாவின் தூதரகப் பொறுப்பாளர் அமைச்சருக்கு விளக்கினார். 2021 டிசம்பர் 24ஆந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் குறித்து அவர் விளக்கமளித்ததுடன்இ தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கை அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்தார். சுதந்திரத்திற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் 1931ஆம் ஆண்டு முதல் இலங்கையர்கள் உலகளாவிய வாக்குரிமையை அனுபவித்து வருவதனை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் நினைவு கூர்ந்தார். ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் லிபியாவின் முயற்சிகளுக்கு ஜனநாயக நாடாக இலங்கை ஆதரவளிப்பதாகவும்இ இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதனூடாகவும்இ ஆபிரிக்கப் பிராந்தியத்தில் ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதனூடாகவும் அரசாங்கம் பொருளாதார இராஜதந்திரத்தில் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைத்தார். தேயிலைஇ இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் லிபியாவுடனான இலங்கையின் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடர்வதற்கு இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

இலங்கையின் பிராந்திய மற்றும் பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் லிபியத் தூதுவருக்கு அறிவித்ததுடன்இ சர்வதேச அளவில் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர்வதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...