நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை அரசியல் தலைவர்களும், மக்களும் உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தி, இன்னும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டால் மாத்திரமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பும், உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது என குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை அடைந்ததும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை அரசியல் தலைவர்களும் மக்களும் உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.