follow the truth

follow the truth

September, 25, 2024
Homeவிளையாட்டு"வாய்ப்புகள் அமையாது, அவற்றை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்!" - துனித் வெல்லாலகே

“வாய்ப்புகள் அமையாது, அவற்றை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்!” – துனித் வெல்லாலகே

Published on

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் அண்மையில் நடைபெற்று முடிந்த கிரிக்கட் தொடர்களில் இலங்கை அணியில் துனித் வெல்லாலகே என்ற இளம் வீரர் புதிதாக களமிறக்கப்பட்டிருந்தார்.

அவர் இந்த தொடரில் விளையாடி 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன், போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையினையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், “வாய்ப்புகள் அமையாது, அவற்றை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்!” என்று துனித் வெல்லாலகே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

நேற்றிடம்பெற்ற ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தது.

எனினும், குறித்த போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இலங்கை அணி

நாளை (26) ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

விஷ்வவிற்கு பதிலாக நிஷான் பீரிஸ் அணிக்கு

வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ காயம் அடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸ் இலங்கை டெஸ்ட்...

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை – 63 ஓட்டங்களால் வெற்றி

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்...