இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
இந்த தொடரை 3 – 1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் 3 தசாப்தங்களின் பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.