follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதாய்மை அவமதிக்கப்படக்கூடாது : ஹிருணிகாவை அவமதிக்கும் வகையில் அவரது புகைப்படங்களை பகிரவேண்டாம் - பிரதமர்

தாய்மை அவமதிக்கப்படக்கூடாது : ஹிருணிகாவை அவமதிக்கும் வகையில் அவரது புகைப்படங்களை பகிரவேண்டாம் – பிரதமர்

Published on

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமசந்திரவை அவமதிக்கும் வகையில் அவரது புகைப்படங்களை பகிரவேண்டாமென கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அநாகரிகமாக நடந்துகொள்ள வேண்டாம் என்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் பெண்கள் சக்தியினால் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாக நேற்று (22) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு கடமையிலிருந்த பெண் பொலிஸாரை. ஹிருணிகா பிரேமசந்திர கட்டியணைத்தார்.

அதன்பின்னர், அவரது மார்பகங்களை அவமதிக்கும் வகையிலான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

அதனையடுத்தே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியல் காரணங்களுக்காக ஹிருணிக்கா எனது வீட்டிற்கு அருகில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தார். அதனை நாகரீகமாக கருதி, அரசியல் ரீதியில் அணுகி தீர்க்கவேண்டும் அத்துடன், பெண்மையை ,தாய்மையை கொச்சைப்படுத்தும் வகையில் எவரும் அநாகரீகமாக நடந்துகொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

தன் மார்பகங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட கேலி, கிண்டல் மற்றும் கொச்சப்படுதியமை தொடர்பில், தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஹிருணிகா பிரேமசந்திர.

”எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன் அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்துள்ளேன். எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

​ஆர்ப்பாட்டத்தின் போது வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும், கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...