மேல்மாகாண ஆயுர்வேத திணைக்களம் தற்போது கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் முதற்கட்டமாக பொதுமக்களை கொவிட்- 19 தடுப்பு நோய்களுக்கான அறிவூட்டல்களை வழங்குவதோடு இந்த கால கட்டத்தில் அவர்களது ஆரோக்கியத்தை பேணவும் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துகொள்வதற்குமான வாழ்க்கை முறை வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது.