இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிலையார் ஓநீல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்கடத்தல் உள்ளிட்ட நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பதற்கான இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.