எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் எஸ். பி. விதானகே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் காரணமாக சில புகையிரத சேவைகளை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பிரச்சனை காரணமாக புகையிரதங்களை இயக்குவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தினமும் 50 முதல் 60 புகையிரதங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.